செப்டம்பர் 14, 2011

சென்னா மசாலா

இங்க நான் MTR சென்னா மசாலா பாக்கெட்ல இருக்குற குறிப்ப அப்டியே கொடுத்திருக்கேன். அதே சமயம் நானும் இத செஞ்சு சாப்டு பாத்தேன். டேஸ்ட்டா இருக்கு.


தேவையான பொருட்கள்:
வெள்ளை சென்னா - 130g
உருளை கிழங்கு - 250g
தக்காளி - 3
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5 பல்
மஞ்சள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவுகொத்தமல்லி இழை- சிறிது
MTR சென்னா மசாலா - 2 டீஸ்பூன்

குறிப்பு: MTR சென்னா மசாலா இலையெனில் சோம்பு,தனியாத் தூள்,சீரகத்தூள்,சிவப்பு மிளகாய்த்தூள் இவற்றை தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.


செய்முறை :

                 * வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.

                  * ஒரு தக்காளி மற்றும் உருளை கிழங்கு சேர்த்து வேக வைத்து மசித்து கொள்ளவும்.

                  *எண்ணெயை சூடு செய்து அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உருளை கிழங்கு, தக்காளி கூழ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

                  *பின் MTR மசாலா, உப்பு, நீர், சேர்த்து  கிரேவி  பதமாக வேகவிட்டு மல்லி இழை தூவி இறக்கவும்.

                  *சுவையான, சத்தான சென்னா மசாலா தயார்.

சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள இது நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக