மே 01, 2012

முருங்கைகாய் சாம்பார்
















தேவையானவை :

  • துவரம் பருப்பு - 1 கப்
  • தேங்காய் - 1/2 கப் அரைத்தது
  • கொத்தமல்லி - 1 1/2 தேக்கரண்டி
  • வத்தல் - 4
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • நச்சீரகம் - 1 தேக்கரண்டி
  • புளிகரைசல் - 1 1/2 கப்
  • முருங்கைகாய் - 4
  • பெருங்காயம் - சிறிது
  • கொத்தமல்லி இலை - சிறிது
  • மஞ்சள்தூள் - சிறிது
  • எண்ணெய் - தாளிக்க
  • கருவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் வத்தல்,கொத்தமல்லி, நச்சீரகம் இவற்றை எண்ணெய்யில் வதக்கி ,பாதி தேங்காய் விழுதையும் சேர்த்து அரைக்கவும்.
  • முருங்கைகாயை வெட்டி உப்பு,மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
  • துவரம் பருப்பை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
  • காய்கறி வெந்ததும் அதனுடன் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு அனைத்தயும் சேர்த்து புளிகரைசலையும் ஊற்றி வேகவிடவும்.
  • பின் ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, போட்டு வெடித்ததும் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
  • பின் மீதி உள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும்.
  • முருங்கைகாய் சாம்பார்  ரெடி.

காய்கறி சாம்பார்

















தேவையானவை :

  • பீன்ஸ் – ஆறு
  • கேரட் – ஒன்று
  • பாகற்காய் – ஒன்று (சிறியது)
  • அவரைக்காய் – நான்கு
  • முருங்கைக்காய் – ஒன்று
  • சாம்பார் வெங்காயம் – பத்து
  • தக்காளி – ஒன்று
  • பச்சைமிளகாய் – இரன்டு
  • உப்பு – தேவைக்கு
  • சாம்பார் பொடி – ஒரு மேசைக்கரண்டி
  • வெல்லம் – சிறுதுண்டு
  • துவரம் பருப்பு - முக்கால் டம்ளர்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • கொத்துமல்லி தழை – சிறிது கடைசியில் தூவ
  • நெய் – ஒரு தேக்கரண்டி
  • அரைத்து கொள்ள
  • தக்காளி – ஒன்று
  • சாம்பார் வெங்காயம் – ஐந்து
  • பூண்டு – இரண்டு பல்லு
  • கறிவேப்பிலை – சிறிது
  • தாளிக்க
  • எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
  • கடுகு- ஒரு தேக்கரண்டி
  • சீரகம் – அரை தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – ஒன்று
  • வெந்தயம் - ஐந்து
  • பூண்டு – ஒரு பல்லு
  • கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :

தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து மசித்து தனியே வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றாய் சேர்த்து அரைக்கவும். (தக்காளி, சாம்பார் வெங்காயம், கருவேப்பிலை, பீன்ஸ்)

கேரட், பாகற்காயை வட்டவடிவமாகவும், பீன்ஸை நான்காகவும், அவரைக்காயை மூன்றாகவும், முருங்கைக்காயை ஒரு விரல் நீளத்துக்கும்,சாம்பார் வெங்காயத்தினை முழுதாகவும், தக்காளியை நான்காகவும் அரிந்து கொள்ளவும். புளியை ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வைக்கவும்.

 எண்ணெய் சட்டியை காய வைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.

அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.

ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.

அத்துடன் மசாலாக்களை போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கிளறி புளி தண்ணீரையும் ஊற்றி, வெல்லத்தையும் சேர்த்து மூடி போட்டு தீயை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.