நவம்பர் 03, 2011

பள்ளிபாளையம் சிக்கன்

தேவையானப் பொருட்கள்:
  • சிக்கன் – 1/2 கிலோ,
  • சின்ன வெங்காயம் – 1/4 கிலோ,
  • காய்ந்த மிளகாய் – 12,
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – 10,
  • துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்,
  • எண்ணெய் – 4 ஸ்பூன்,
  • உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
  • சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி, தண்ணீர் வடித்து வைக்கவும்.
  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு, மிளகாயை மட்டும் தனியே வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன், கிள்ளி வைத்த மிளகாயை போடவும்.
  • மிளகாய் சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.
  • 1 நிமிடம் வதக்கிய பின், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.
  • 2 கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.
  • தண்ணீர் வற்றி, சிக்கன் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.