ஜூன் 19, 2011

கருவாட்டு குழம்பு (கொள்ளி கருவாடு)

தேவையான பொருள்கள்:
 
* கொள்ளி கருவாடு - 5
* கிராம்பு - 4
* பூண்டு - 6
* வரமிளகாய் - 2
* முட்டை - 3
* சிறிய வெங்காயம் - 3
* தேங்காய் - அரை மூடி
* பட்டை - சிறிது
* இஞ்சி - தேவையெனில்
* எண்ணெய் - தேவையான அளவு
* கடுகு - தேவையான அளவு
* உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
* கறிவேப்பிலை - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* வர மிளகாய் தூள் - தேவையான அளவு

செய்முறை:
* கடையில் கருவாடு வாங்கும் பொது கொள்ளி கருவாடு என கேட்டு வாங்கவும்.

* கருவாட்டை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சுடவும்.

* சூடு ஆரிய பின் கருவாட்டின் தலையை கில்லி எடுத்து விடவும்.

* கருவாட்டின் சதை பகுதியை முள் நீக்கி தனியாக வைத்து கொள்ளவும்.

* மிதமான வெந்நீரில் லேசாக அலசி கொள்ளவும்.

* முட்டையை அவித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

* பட்டை, கிராம்பு, தேங்காய், பூண்டு, வரமிளகாய்,
விருப்பமிருந்தால் மட்டும் சிறிதளவு இஞ்சி சிறிது சேர்த்து நன்றாக 

அரைத்து வைத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி
கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய சிறிய வெங்காயம், கருவாடு, மஞ்சள் 

தூள் சிறிது, மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப ஆகியவற்றை ஒன்றன் பின் 

ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும் .

* பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி அரைத்து வைத்துள்ள மசாலை சேர்த்து நன்கு

வேகவிடவும்.

* குழம்பானது கிரேவி பதத்திற்கு வந்தவுடன் ருசியை பார்த்து அதற்கேற்ப 

உப்பு சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நேரம் வேகவிடவும். அவித்த 

முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் பிரட்டவும். கொள்ளி 

கருவாட்டு குழம்பு தயார்.

இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

கொள்ளி கருவாடு:


நெருப்பில் வாட்டிய பின் உரிக்கப்பட்ட கருவாடு:


கொள்ளி கருவாட்டு கொழம்பு: