செப்டம்பர் 18, 2011

காராமணி (அ) தட்டபயிறு சுண்டல்

தேவையான பொருட்கள் :


காராமணி (அ) தட்டபயிறு - 150g (3 Mem)
சிறிய வெங்காயம்  - 100g
கறிவேப்பிலை, கடுகு, கடலை பருப்பு ,சோம்பு - தாளிக்க
வர மிளகாய் - 5
எண்ணெய்- தாளிக்க
உப்பு  -  தேவைக்கு
மிளகாய் தூள் - தேவைக்கு
 மஞ்சள் - தேவைக்கு

செய்முறை :
* காராமணி (அ) தட்டபயிறு 3 மணி நேரம் ஊற வைத்து பின் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பருப்பு உடையும் வரை வேக வைத்து நீரை வடித்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.


* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு ,சோம்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், நறுக்கிய சிறிய வெங்காயம், ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக தாளிக்கவும்.


* பின் அதில் காராமணி (அ) தட்டபயிறு ஐ சேர்த்து நன்றாக தாளித்து தேவையெனில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாக தாளித்து மல்லி இழையை தூவி இறக்கவும்.


காராமணி (அ) தட்டபயிறு சுண்டல் தயார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக